25. அப்பூதியடிகள் நாயனார்

அமைவிடம் : temple icon.thillaivaz anthanar
வரிசை எண் : 25
இறைவன்: கைலாசநாதர்
இறைவி : பெரியநாயகி
தலமரம் : ?
தீர்த்தம் : ?
குலம் : அந்தணர்
அவதாரத் தலம் : திங்களூர்
முக்தி தலம் : திங்களூர்
செய்த தொண்டு : குரு வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : தை - சதயம்
வரலாறு : சோழ நாட்டில் திங்களூரில் அவதாரம் செய்தவர். திருநாவுக்கரசரை நேரில் காணாமலேயே அவர்பால் அன்பு பூண்டு அவர் பெயரையே தம் மக்களுக்கும் தாம் அமைத்த தண்ணீர்பந்தல், சாலை, மடம், குளம் முதலியவைகளுக்கும் வைத்தார். ஒரு சமயம் திருநாவுக்கரசர் திங்களூர் வந்திருந்தார். அப்பூதியடிகளைப் பற்றிக் கேள்விப்பட்டு அவர் இல்லம் வந்தார். தரும சாலைகளுக்கு உம் பெயர் வைக்காமல் வேறொரு பெயரால் வைத்த காரணம் என்ன என்று வினவினார். திருநாவுக்கரசரின் பெருமையை அறியாத நீர் யார் என்று அப்பூதியடிகள் கேட்க, தாங்கள் போ’ற்றும் அந்த சிறுமையேன் யான் தான் என்றார். அப்பூதியடிகள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. தம் இல்லத்தில் திருவமுது கொள்ள வேண்டும் என்று வேண்டினார். அதற்கு நாவரசரும் சம்மதித்தார். அடிகளின் மகன் மூத்த திருநாவுக்கரசு வாழை இலை பறிப்பதற்காகச் சென்ற இடத்தில் அரவம் தீண்டி மாண்டான். இச்செய்தியைச் சொல்வதற்குத் தயங்கிய அடிகள் மகனின் சடலத்தை மறைத்து வைத்துவிட்டு திருநாவுக்கரசருக்கு அமுது படைக்க அவரை அழைக்கிறார். அப்போது அவர் முகவாட்டத்தைக் கவனித்த நாவரசர் உமது மூத்தப் பிள்ளையை அழையும் என்றார். அவன் இனி உதவான் என்று சொல்லி நிகழ்ந்தவற்றைக் கூறினார் அப்பூதியடிகள். திருநாவுக்கரசர் ஒன்றுகொலாம் என்ற திருப்பதிகத்தைப் பாடினார். இறந்த மகனும் உயிர் பெற்று எழுந்தான். அப்பூதியடிகள் திருநாவுக்கரசரின் திருவடிகளைப் போற்றியே இறுதியில் இறைவனடி சேர்ந்தார்.
முகவரி : அருள்மிகு.கைலாசநாதர் திருக்கோயில், திங்களூர் (வழி திருபுவனம்), திருவையாறு– 613204 தஞ்சை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : தொலைபேசி : 04362-262499

இருப்பிட வரைபடம்


வடிவு தாம் காணார் ஆயும் மன்னுசீர் வாக்கின் வேந்தர் 
அடிமையும் தம்பிரானார் அருளும் கேட்டவர் நாமத்தால் 
படி நிகழ் மடங்கள் தண்ணீர்ப் பந்தர்கள் முதலாய் உள்ள 
முடிவு இலா அறங்கள் செய்து முறைமையால் வாழும் நாளில்

- பெ.பு. 1790
பாடல் கேளுங்கள்
 வடிவு தாம்


Zoomable Image

நாயன்மார்கள் தலவரிசை தரிசிக்க    பெரிய வரைபடத்தில் காண்க